Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியை டுவீட் போட்டு கலாய்த்த ராமதாஸ்: கடுப்பில் திமுக தரப்பு!

கருணாநிதியை டுவீட் போட்டு கலாய்த்த ராமதாஸ்: கடுப்பில் திமுக தரப்பு!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (12:51 IST)
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையை கலாய்க்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
திமுக தலைவர் கருணாநிதியின் கேள்வி பதில் அறிக்கை:-
 
கேள்வி - ஒருதலைக் காதலுக்கு மற்றும் ஓர் இளம்பெண் பலியாகி இருக்கிறாரே?
 
கலைஞர் - அண்மைக் காலத்தில் இது ஐந்தாவது பலி. சென்னையில் சுவாதி, விழுப்புரத்தில் நவீனா, கரூரில் சோனாலி, தூத்துக்குடியில் பிரான்சினா, தற்போது விருதாசலத்தில் புஷ்பலதா. இந்த ஐந்து பெண்களின் மரணத்திற்குப் பிறகாவது ஒருதலைக் காதலுக்கு தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுப்பார்கள், கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பலியான பெண்களின் குடும்பங்களுக்கு அரசினர் உரிய உதவித் தொகையை விரைவில் அளிக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

 
இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த ராமதாஸ், ஒருதலைக் காதலை இளைஞர்கள் கைவிட வேண்டும்: கலைஞர் வேண்டுகோள் - வேண்டுமானால் அந்த தறுதலைகளுக்கு விண்ணப்பம் கொடுத்து பாருங்களேன்! என கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த திமுகவினர் பாமக ராமதாஸ் மீது கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments