Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் கைது!

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் கைது!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (14:06 IST)
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் பாமக சார்பில் ஆக்னஸ் களமிறக்கப்பட்டார். இவரை தற்போது பண மோசடி புகாரில் போலிசார் கைது செய்துள்ளனர்.


 
 
பாமக மகளிரணி செயலராக இருப்பவர் ஆக்னஸ், இவர் கடந்த முறை முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வருகின்ற அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கி வருவதாக பலரிடம் பணம் வாங்கி உள்ளார்.
 
ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றதாக பலரும் ஆக்னஸ் மீது புகார் அளித்தனர். உறுதியளித்தபடி ஆக்னஸ் வீடுகள் வாங்கி தராததால் 100-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனை விசாரித்து வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆக்னஸை கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments