Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருக்கும் பயன்படாமல் வீணாய் போனது மின்சாரம்: அன்புமணி ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (17:05 IST)
யாருக்கும் பயன்படாமல் வீணாய் போனது மின்சாரம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் நேற்று முன்நாள் 12 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அதில் 5.22 கோடி யூனிட் மின்சாரத்தை மட்டுமே மின்வாரியம் கொள்முதல் செய்திருக்கிறது. அதனால் கடந்த 15-ஆம் தேதி 6.77 கோடி யூனிட் மின்சாரம் யாருக்கும் பயன்படாமல் வீணாய் போயிருக்கிறது!
 
மழை காரணமாக மின் தேவை குறைந்து விட்ட நிலையில் அனல் மின் நிலைய உற்பத்தியையும் குறைத்து விட்ட மின்வாரியம், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரக் கொள்முதலையும் குறைத்து விட்டது. அதனால் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்!
 
வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவை, அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை காரணம் காட்டி குறைக்க மறுக்கும் மின்சார வாரியம், காற்றாலை மின்சாரத்தின் அளவை மட்டும் விருப்பம் போலக் குறைப்பது எந்த வகையில் நியாயம்?
 
இந்தியாவின் பிற மாநிலங்களில் மின் பற்றாக்குறை நிலவும் சூழலில், அதிக அளவில் காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்தால் அதை மின் சந்தையில் விற்பனை செய்ய முடியும். அதைக் கருத்தில் கொண்டு காற்றாலை மின்சாரத்தை வாரியம் முழும்மையாக கொள்முதல் செய்ய வேண்டும்!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments