Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் டுவிட் செய்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (07:27 IST)
இன்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை முதலே தமிழர்கள் பலர் கோவில்களுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர் என்பதும் கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழக சகோதர சகோதரிகளுக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.பிரதமர் மோடியின் இந்த தற்போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments