Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி..! சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு..!!

Senthil Velan
வெள்ளி, 15 மார்ச் 2024 (17:43 IST)
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கோவையில் வருகிற 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பேரணி நடத்த பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக காவல்துறை அனுமதி கோரப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலாது என கோவை மாநகர காவல்துறை தெரிவித்திருந்தது.
 
பிரதமர் மோடிக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் பிற தீவிரவாத அமைப்பால் பாதுகாப்பு அச்சுரத்தில் உள்ளது என்றும் வாகன பேரணிக்கு அனுமதி தந்தால் அவசர மருத்துவ ஊர்தி மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியிருந்தது.

ALSO READ: எஸ்.வி.சேகரின் தண்டனை நிறுத்தி வைப்பு..! சிறை தண்டனைக்கு எதிரான வழக்கில் உத்தரவு..!!
 
இதனிடையே பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவையில் வருகிற 18-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதில் மீண்டும் சிக்கல்! ராக்கெட் பழுது..!

இன்று பெளர்ணமி தினம்.. திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்..!

1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை.. முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை விவரங்கள்..!

முதல்வர் பினராயி விஜயனுடன் சசி தரூர் எடுத்த செல்பி: காங்கிரஸ் ரியாக்சன்..!

நிர்மலா சீதாராமனின் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. விஜய் கண்டன அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments