Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னர் மாளிகையில் மோடி-அண்ணாமலை சந்திப்பு? புதிய கூட்டணி அமைகிறதா?

Mahendran
வெள்ளி, 19 ஜனவரி 2024 (10:26 IST)
இன்று பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கும் நிலையில் கவர்னர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளை பிரதமர் சந்திக்க இருப்பதாகவும் குறிப்பாக இந்த சந்திப்பின்போது அண்ணாமலை மற்றும் எல் முருகன் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின்னர்  அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் மீண்டும் அதிமுகவுடன் சேர்வது குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை. அதே நேரத்தில் பாஜகவுடன் சேரவும்  அந்த கட்சிகள் தயங்கி வருகின்றன,.
 
இந்த நிலையில்  தமிழகத்தில் உள்ள சின்ன சின்ன கட்சிகளை கூட்டணியில் கொண்டுவர அண்ணாமலை மற்றும் எல் முருகன் ஆகியோர்களுக்கு பிரதமர் அறிவுறுத்துவார் என்றும் தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற அவர் ஆலோசனை கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கவர்னர் மாளிகையில் இன்று பிரதமர் மோடியை அண்ணாமலை மற்றும் எல். முருகன் சந்தித்த பின்னர் கூட்டணிக்காக அடுத்த கட்ட முயற்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments