Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தை பெற்றது விருதுநகர் மாவட்டம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தை பெற்றது விருதுநகர் மாவட்டம்
, வியாழன், 7 மே 2015 (13:16 IST)
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானதில் விருதுநகர் மாவட்ட மாணவர்கள் 97.46 சதவீதம் பெற்று, அதிக அளவில் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றனர்.
 
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தங்களது எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்வு முடிவு என்பதால், இந்த தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகளும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர். 
 
இந்த தேர்வில் தமிழகத்தில், விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டம்  80.92 சதவீதம் பெற்று கடைசி இடத்தை பெற்றுள்ளது.    
 
மாவட்ட வாரியாக மாணவர்கள் தேர்ச்சி விகித விபரம் இதோ:- 
 
விருதுநகர் - 97.46
 
பெரம்பலூர் - 97.25
 
ஈரோடு - 96.06
 
நாமக்கல் - 95.75
 
தூத்துக்குடி - 95.5
 
திருச்சி - 95.36
 
கன்னியாகுமரி - 95.21
 
ராமநாதபுரம் - 94.66
 
கோவை - 94.36
 
திருப்பூர் - 94.31
 
சிவகங்கை - 94.71
 
திருநெல்வேலி - 93.91
 
தேனி - 93.8
 
மதுரை - 92.87
 
தர்மபுரி - 92.31
 
கரூர் - 91.71
 
சென்னை - 91.54
 
சேலம் - 90.69
 
காஞ்சிபுரம் - 90.68
 
தஞ்சாவூர் - 90.26
 
திண்டுக்கல் - 90.22
 
புதுக்கோட்டை - 89.56
 
புதுச்சேரி - 88.15
 
திருவள்ளூர் - 87.32
 
உதகமண்டலம் - 86.74
 
கிருஷ்ணகிரி - 86.48
 
நாகப்பட்டினம் - 86.45
 
கூடலூர் - 84.69
 
விழுப்புரம் - 83.96
 
திருவண்ணாமலை - 83.43
 
திருவாரூர் - 83.08
 
வேலூர் - 81.39
 
அரியலூர் - 80.92
 
இதனால், விருதுநகர் மாவட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil