Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11-ந்தேதி வந்துடுங்க! பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் சேலம் நாயகன்!

11-ந்தேதி வந்துடுங்க! பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் சேலம் நாயகன்!
, வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (19:53 IST)
சில நாட்களுக்கு முன்பு சேலத்தில்   ரயில்வே மேம்பாலம் கட்ட அரசு தரப்பில் முறையாக நிலம் கையகப்படுத்தவில்லை என கூறி மேம்பால பணியை நிறுத்தியதற்காக சமூக சேவகர் பியூஷ் மனுஷ் கைது செய்யபட்டு, சிறையில் படுமோசமாக தாக்கப்பட்டார்.


 


அதன் பிறகு, சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு பெருகியது, பின், அவர் ஜாமினில் விடுதலையானார். இந்நிலையில், இயற்கை மீதும், பொதுமக்கள் மீதும் அன்பு கொண்ட அவர் சமூக நோக்கோடு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘‘சேலம் மாவட்டம் எண்ணற்ற பிரச்சனைகளால் சிக்கி தவிக்கிறது, அவற்றுள் சிலவற்றை குறிப்பிட்டுள்ளேன். இதே போன்று பிரச்சனைகளை உங்கள் மாவட்டம் மற்றும் நகரங்களிலும் நீங்கள் சந்தித்து வரலாம். சட்டத்துக்கு புறம்பாக இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது நீர்நிலைகள் மற்றும் நீர் வழி பாதைகள் பாதுகாக்கப்படாமல் இருப்பது.

திடக்கழிவு மேலாண்மை முறையாக செயல்படாமல் இருப்பது,  சாதி மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகள் ,  பெருநிறுவனங்களால் சூழல் மாசடைதல். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உயர் அதிகாரிகளின் அக்கறையின்மை,  பொதுவிடங்களில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுதல். அரசு மற்றும் தனியார் சுகாதார துறையில் இன்றைய அவல நிலை, கல்வித்துறை பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது. பழங்குடி மக்கள் மீதான விரோதப் போக்கு,  விவசாயிகள் சந்திக்கும் இடர்பாடுகள்,  நகரம் மற்றும் நாட்டின் திட்டமிடல் மீறல்கள் மற்றும் பல. சமீபத்தில் நிகழ்ந்த கைதுக்கு பின்பு சேலம் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து நண்பர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவினையும், பொதுப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒவ்வொருவரும் அவரவர் வசிக்கும் இடத்தில் இருந்தவாறே சிறிய பங்களிப்புடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய ஒரு திட்டத்தினை வகுத்துள்ளோம். நீங்களும் இதில் பங்குபெற்று உங்கள் பகுதியில் நிகழும் அநீதிகளை தீர்த்து நீதியினை நிலைநாட்டிட விரும்பினால் தவறாமல் அடுத்தவாரம் செப்டம்பர் 11ஆம் தேதி சேலத்தில் நிகழும் முதல்கட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்.” என்று அந்த அறிக்கையில் கூறப்படிருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிகாந்த் நடித்த ஹாலிவுட் படத்தின் பெயர் தெரியுமா? அவர் நடித்த காட்சி இதோ! வீடியோ