Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்தார் பியூஷ் கோயல்: கூட்டணி அறிவிப்பு எப்போது?

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (22:30 IST)
பாராளுமன்ற தேர்தல் குறித்த கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ரகசியமாக நடத்தி வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் சற்றுமுன் சென்னை வந்தார். அதிமுக முன்னணி தலைவர்களை சந்தித்து பேசிய பியூஷ் கோயல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளதாகவும், மக்கள் நலனுக்கு உகந்த கூட்டணி அமைக்கப்படும் என்றும், மத்தியில் அடுத்த அமையும் ஆட்சியில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் தரும் வகையிலும் பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமென்றும் கூறினார்.
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 8 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதில் ஆறு தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் இரண்டு சிறிய கட்சிகள் பாஜக சின்னத்தில் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments