Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனாமுத்தா போச்சா... பாண்டியில் சதமடித்த பெட்ரோல்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (11:42 IST)
4 மாதங்களுக்கு பிறகு தற்போது புதுச்சேரியில் மீண்டும் இன்று பெட்ரோலின் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 107.45 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 97.52 எனவும் விற்பனையாகிறது.
 
புதுச்சேரி மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோலின் விலை, லிட்டருக்கு நூறு ரூபாயைக் கடந்து விற்கப்பட்டது. இதன் பின்னர் 4 மாதங்களுக்கு பிறகு தற்போது புதுச்சேரியில் மீண்டும் இன்று பெட்ரோலின் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. 
 
ஆம், இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 89 ரூபாய் 60 காசுகளுக்கும் விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments