Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2000 கொடுத்ததால் பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்: உபியை போல் சென்னையிலும் ஒரு சம்பவம்

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (08:37 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்ன 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது என்பது தெரிந்ததே. இருபினும் 2000 ரூபாய் நோட்டு செப்டம்பர் 30 வரை செல்லும் என்றும் அனைத்து வணிக கடைகள் பெட்ரோல் நிலையங்கள் வங்கிகள் ஆகிவிற்றில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கூட டாஸ்மாக் கடைகளில் கூட 2000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் பெட்ரோல் போட்ட ஒருவர் 2000 ரூபாய் நோட்டை கொடுத்த போது அதை வாங்க மறுத்து போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் சென்னையில் இன்று நடந்துள்ளது.
 
சென்னை பெரம்பூரில் ரூ.2000 நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியருடன் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்தார். ரூ.2000 நோட்டு கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட வாடிக்கையாளரிடம் ரூ.2000 நோட்டு வாங்கப்படாது என பெட்ரோல் பங்க் ஊழியர் கூறியதால் வாக்குவாதம் முற்றியது. இந்த நிலையில், போட்ட பெட்ரோலை டியூப் மூலம் உறிஞ்சி எடுத்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments