Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! – உசிலம்பட்டியில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (13:30 IST)
உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் பால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள கீழப்பட்டியைச் சேர்ந்தவர் சுமதி, இவரது கணவர் தங்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அதே ஊரில் சுமதி பால்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

இறந்த கணவரின் சொத்தை பிரிப்பது தொடர்பாக அவரது கணவர் குடும்பத்தினருக்கும் சுமதிக்கும் தகராறு இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்து விரைந்து வந்த விக்கிரமங்கலம் காவல் நிலைய போலிசார் தீயை அணைத்ததோடு வீட்டிற்குள் மயங்கிய நிலையில் கிடந்த சுமதியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துவிட்டு இச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை  ஆய்வு செய்து  மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!

2900 மோட்டார்கள் பொருத்தி வெள்ளத்தை வடிக்கும் பணிகள்… அமைச்சர் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments