பெட்ரோல் பங்குகள் மற்றும் மருத்துவமனைகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும். அதனை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை அடுத்து அனைத்து இடங்களிலும் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றனர்.
ரயில் நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பழைய ரூபாய் இன்று வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கும் சில்லரை தட்டுபாட்டால் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றனர்.
மேலும் அனைத்து ஏடிஎம்களும் இன்றுமுதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று எந்த ஏடிஎம் மையமும் செயல்படவில்லை. இதனால் இன்று ஏடிஎம் மையத்தை நம்பி இருந்தவர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி கூறியதாவது:-
ஏடிஎம்கள் செயல்படுவதற்கான மென்பொருள் திருத்தம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் போனது.
எனவே பெட்ரோல் பங்குகள் மற்றும் மருத்துவமனைகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும். வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.