Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிருப்தி

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (07:27 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இருந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது 
 
உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. அதற்கு காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் சதவீதம் உயர்ந்து கொண்டே இருந்ததுதான் என்பதும் இதனை எதிர்க்கட்சிகள் கண்டித்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வரியை குறைக்காததன் காரணமாக இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் உயர்ந்துள்ளது
 
சென்னையில் இன்று பெட்ரோலின் விலை என்பது 86.96 ரூபாயாக விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை 79.72 ரூபாய் வரை விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகளும்,டீசல் விலையை லிட்டருக்கு 26 காசுகளும் இன்று உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வேலுமணியும் டெல்லி பயணம்.. அதிமுகவில் பரபரப்பு..!

ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரை கடத்திய இஸ்ரேல் ராணுவம்!? - இஸ்ரேலில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments