பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: முடிவே இல்லையா?

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (08:33 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது
 
உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே இருந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் சதவீதம் உயர்ந்து கொண்டே இருப்பதுதான் இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன.
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோலின் விலை ரூ.87.18க்கு விற்பனையாகிறது. இன்று மட்டும் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்துள்ளது. அதேபோல் டீசல் விலை ரூ.79.95க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டீசல் விலை இன்று மட்டும் 23 காசுகள் உயர்ந்துள்ளது.
 
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளதை அடுத்து இதற்கு முடிவே இல்லையே என பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

கல்வி துறைக்கு படித்த அமைச்சர் வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments