Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டர் விலை உயர்வு போல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (08:35 IST)
இன்று சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் நேற்றைய விலையில் தான் இன்றும் விற்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் 280 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம்.  இந்த நிலையில் 284 வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 94.24 விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 சென்னையில் வீட்டு உபயோவதற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 50ம் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 223 என உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது பொது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பது எங்கே? பாலச்சந்திரன் பேட்டி..!

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

அடுத்த கட்டுரையில்
Show comments