Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று விலை மாற்றமா?

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (07:48 IST)
சென்னையில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. 
 
ரஷ்யாவிடமிருந்து 30 சதவீதம் சலுகை விலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்து உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 95 டாலருக்கும் குறைவாக விற்பனை ஆகி வருவது பெட்ரோல் டீசல் விலை இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments