Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூப்பனாரிடம் உங்கள் மகனை தோளில் சுமக்கிறோம் என்றவர் பீட்டர் அல்போன்ஸ் - விடியல் சேகர் தாக்கு

மூப்பனாரிடம் உங்கள் மகனை தோளில் சுமக்கிறோம் என்றவர் பீட்டர் அல்போன்ஸ் - விடியல் சேகர் தாக்கு
, புதன், 13 ஏப்ரல் 2016 (18:31 IST)
மூப்பனார் உயிருடன் இருக்கும் போது உங்கள் மகனை தோளில் தூக்கி நாங்கள் சுமக்கிறோம் என்று சொன்னவர்தான் பீட்டர் அல்போன்ஸ் என்று தமாகா மாநில பொது செயலாளர் விடியல் சேகர் கூறியுள்ளார்.
 

 
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தமாகா, அதிமுக தரப்பு சரியான ஒத்துழைப்பு அளிக்காததால் தேமுதிக-மக்கள் நல கூட்டணியில் இணைந்தது. இதனையடுத்து அக்கட்சியில் இருந்து பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 
 
இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள தமாகா மாநில பொது செயலாளர் விடியல் சேகர், ”மூப்பனார் உயிருடன் இருக்கும் போது நீங்கள் ஓய்வு எடுங்கள். உங்கள் மகனை தோளில் தூக்கி நாங்கள் சுமக்கிறோம் என்று சொன்னவர்தான் பீட்டர் அல்போன்ஸ். பீட்டரை வளர்த்து அழகு பார்த்தவர் மூப்பனார். அவரைப் போலவே வாசனும் எளிய தலைவராக உள்ளார்.
 
ஆனால் பதவி ஆசையில் பீட்டர் அல்போன்ஸ் துரோகம் செய்துள்ளார். தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியோடு தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டர் அல்போன்ஸ், இப்போது மதவாதம், காலம் தாழ்த்தி எடுத்த முடிவு என்றெல்லாம் கூறி திமுகவுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்று அவர் கூறுவது எதற்கோ அவர் விலை போய் விட்டார் என்பதையே காட்டுகிறது.
 
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியில் தமாகா இணைந்த தினத்தன்று மதியம் 2.30 மணி வரை பீட்டர் அல்போன்சும், விசுவநாதனும் எங்கள் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுடன்தான் இருந்தனர்.
 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேர், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 2 பேர், முன்னாள் எம்.பி.க்கள் 15 பேர் இப்போதும் தமாகா-விலேயே இருக்கிறார்கள்.தென்னை மரத்தில் ஆண்டுதோறும் சிறகெடுப்பு என்ற கழிவுகள் அகற்றப்படுவதுண்டு. அது போல கட்சியில் இருந்த ஓரிரு கழிவுகள் விலகி கட்சி சுத்தமாகி உள்ளது” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil