Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீட்டா அமைப்பை பற்றி வதந்திகள் பரப்பப்படுகிறது: பீட்டா அமைப்பு விளக்கம்

பீட்டா அமைப்பை பற்றி வதந்திகள் பரப்பப்படுகிறது: பீட்டா அமைப்பு விளக்கம்
, ஞாயிறு, 17 ஜனவரி 2016 (14:46 IST)
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போராடி ஜல்லிக்கட்டுக்கு தடையை பெற்றிருக்கும் பீட்ட அமைப்பு மீது ஒட்டுமொத்த தமிழகமும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது.


 
 
இதற்கிடையில் பீட்டா அமைப்பு பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்களும் பரவி வருகின்றது. இந்நிலையில் தமிழர்களின் ஏகோபித்த எதிர்ப்பை சமபாதித்து வைத்திருக்கும் பீட்டா இந்தியா அமைப்பு, தங்களை பற்றி பரவி வரும் தகவல்கள் பொய்யானவை என விளக்கமளித்துள்ளது.
 
பீட்டாவை விமர்சிப்பவர்கள் உண்மையை தெரிந்து கொள்ளாமல் குற்றம்சாட்டுவதாக பீட்டா இந்தியா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. தங்கள் அமைப்பிற்கும் பீட்டா யுஎஸ்ஏ அமைப்பிற்கும் நேரடித் தொடர்பு கிடையாது என்றும், முக்கிய விசயங்களில் அவர்களது கருத்துகள் கேட்கப்படும் என்றும் பீட்டா இந்தியா குறிப்பிட்டுள்ளது.
 
மேலும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பைக் குறித்து இணையதளங்களில் வெளியாகி உள்ள தகவல்கள் முழுக்க முழுக்க ஒருதலைப்பட்சமாக வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள பீட்டா இந்தியா உண்மையான விவரங்கள் தங்கள் இணையதளத்தில் உள்ளதாகவும். அதில் தெரிந்து கொள்ளுமாறு கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil