10 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (16:53 IST)
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களிடம் 10 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களை காலி செய்ய ஆவடி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மன்றத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடு கட்டியவர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அரசு நிலத்தில் ஆக்கிரமத்தை வீடு கட்டியவர்கள் காலி செய்ய மறுத்தால் பத்து மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனுதாக்கல் செய்த ஆக்கிரமிப்பு செய்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments