Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க ஊரு பொண்ணு ஜெயிக்கணும்! மன்னார்குடியில் கமலா ஹாரிஸுக்கு பேனர்!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (15:21 IST)
அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி மன்னார்குடியில் வைக்கப்பட்டுள்ள பேனர் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார் கமலா ஹாரிஸ். இவரது தாத்தா கோபாலன் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர். அதனால் கமலா ஹாரிஸின் வெற்றியை அமெரிக்காவை விட மன்னார்குடியினர் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில் தங்கள் ஊரை சேர்ந்த பெண் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி துளசேந்திரபுரம் கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர். கிராம மக்கள் மட்டுமன்றி அப்பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினரும் தங்கள் கட்சி சார்பில் கமலா ஹாரிசுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சமூக வலைதளங்களில் போஸ்டர்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் உள்ளூர் தேர்தல் அளவிற்கு அமெரிக்க தேர்தலும் தமிழகத்தில் முதல்முறையாக உற்று நோக்கப்படுவதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments