Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக்ஜாம் புயல் எதிரொலி: மெரீனாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிப்பு..!

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (16:24 IST)
வங்க கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல் 5 அல்லது 6ஆம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினாவில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்கரை நுழைவு பாதைகள் மூடப்பட்டுள்ளது.  கடற்கரைக்கு வரும் பொதுமக்களை ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேபோல் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வரும் பொது மக்களையும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.  தடையையும் தாண்டி பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள்: ஆய்வு செய்த ஐகோர்ட் நீதிபதி..!

வெள்ள பாதிப்பை பார்க்க வந்த ஸ்பெயின் மன்னர்! சேற்றை வாரி அடித்த மக்கள்! - வைரலாகும் வீடியோ!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை பெரும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

சிறப்பு பேருந்துகளில் ஒரே நாளில் 79,626 முன்பதிவு பயணம்! போக்குவரத்துக் கழகம் புதிய சாதனை!

உத்தமர்போல் சாபம் விட வேண்டாம்.. சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments