Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா பணிகளில் ஆர்.எஸ்.எஸ்! – ட்ரெண்டாகும் #ChennaiCorpRemoveRSS

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (09:56 IST)
சென்னையில் கொரோனாவுக்கு எதிரான தன்னார்வலர்கள் சேவையிலிருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நீக்க சொல்லி சமூக வலைதளங்களில் கோரிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு 200 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணிகளுக்காக தன்னார்வலர்கள், சமூக நல அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்பேரில் சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் சாலை பாதுகாப்பு பணிகள், வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்கும் பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ம் கொரோனா பாதுகாப்பு பணிகளில் சென்னை மாநகராட்சியோடு இணைந்து பணியாற்றுவதாக தெரிகிறது.

இதற்கு பலர் சமூக வலைதளங்கள் மூலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பின்புலத்திலேயே மதரீதியான குற்றங்களில் தொடர்புடைய அமைப்பான ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத அமைப்புகள் கையில் காவல் பணிகளை வழங்கக்கூடாது என வலியுறுத்தி பலர் #ChennaiCorpRemoveRSS என்ற ஹேஷ்டேகை ஷேர் செய்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இதற்கு பதிலளித்துள்ள சிலர் பேரிடர் காலங்களில் அந்த அமைப்பு பல இடங்களில் உதவிகள் செய்த புகைப்படங்களை பதிவிட்டு ஆர்.எஸ்.எஸ் மீது தவறான கருத்தியலை முன்வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments