Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல்

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (08:17 IST)
சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி முதலில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை ஏற்று நடத்தி 10 காவல்துறை அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு சமீபத்தில் மாறியது 
 
மேலும் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கில் முதலில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பதும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பால்துரை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறப்பு எஸ்ஐ பால்துரை உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments