Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுச்சி லீக்ஸ் ; பதறிய நடிகை பார்வதி நாயர் ; கலாய்த்த நெட்டிசன்கள்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (10:43 IST)
பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பற்றி நடிகை பார்வதி நாயர் தனது கோபத்தை கொட்டியுள்ளார்.


 

 
சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாடகி சின்மனி, அனிருத், ஆண்டிரியா, பார்வதி நாயர், அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதில், சஞ்சிதா ரெட்டி மட்டும் அந்த வீடீயோவில் இருப்பது நான் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை பார்வதி நாயர் “ ஒருவரின் பெயரை பொதுவெளியில் இழிபடுத்துவது கிரிமினல் குற்றமாகும். இதை நிறுத்துவார்கள் என நம்புகிறேன். என் மனசாட்சி படி நான் சுத்தமாகவே இருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான   ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 
இந்நிலையில் சுசித்ராவின் கணக்கிலிருந்து “ குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான நெட்டிசன்களும் அவரின் கருத்தை கிண்டலடித்து கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments