Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூலூரில் நுழைய கமலுக்குத் தடை – கட்சி உறுப்பினரின் மனைவி புகார் !

Webdunia
வியாழன், 9 மே 2019 (13:02 IST)
சூலூர் தொகுதியில் கமல் பிரச்சாரம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டுமென கட்சி உறுப்பினரின் மனைவி மனு அளித்துள்ளார்.

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த 4 தொகுதிகளுக்கான தேர்தலுக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம் தனது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியும் ஒன்று. அந்த தொகுதியில் கமல் பிரச்சாரம் செய்ய வரக்கூடாது என கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் பாலமுருகன் என்பவரின் மனைவிதான் கொடுத்துள்ளார். தேர்தல் பரப்புரைக்கு சென்றபோது பாலமுருகன் உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் இறப்புக்கு கமல் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் தொண்டர்களையே கண்டு கொள்ளாத கமல் மக்கள் பிரச்சனைகளை எப்படி போக்குவார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் சூலூர் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு நிகழ்ச்சிகள் ரத்து.. அப்பல்லோ நோக்கி விரையும் குடும்பத்தினர்.. முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து துரைமுருகன்..!

தவெகவினர் ஆபாசமாக சித்தரிக்கின்றனர்! விஜய் மீது வைஷ்ணவி பகீர் புகார்!

யாராவது காப்பாத்துங்க..! கடித்து குதறிய நாய்! கதறிய சிறுவன்! பார்த்து மகிழ்ந்த கொடூரன்! - அதிர்ச்சி வீடியோ!

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments