Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் திருந்தி விட்டார்கள்; மறு தேர்தல் நடத்துங்கள் - ஆர். பார்த்திபன்

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (11:21 IST)
தமிழகத்தில் மறு தேர்தலை நடத்துவது நல்லது என இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார். 


 

 
நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சமாதிகள் அருகே, சில நேரம் செலவிட்டார்.  அதன்பின், அந்த புகைப்படத்தை தன்னுடைய முகநூலில் பதிவிட்டு அவர் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
 
முதன்முறையாக ... மறைந்த  முதல்வர் சமாதிக்கு சென்றேன்.
 
தியானிக்க அல்ல... ஜீரணிக்க !
 
மரணத்தின் மர்மம், மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள் மௌனத்தின் மாமர்மம்,
 
அரசியல் அதர்மங்கள், ரிசார்ட்டில் Mla-க்கள், ரிமோட்டாய் கோடிகள், நடப்பவை நடந்தவை....
 
விளங்காமல் கலங்கரை விளக்கத்திலிருந்து நடந்து சென்றேன். 
 
கட்சிகளின்  கல்மிஷங்கள் இல்லாத Mgr-ன் விசுவாசிகள்,
 
அதிமுக தொண்டர்கள், அறியா பொதுஜனங்கள், அணையா தீபங்களாய்
 
அங்கே ஒளியூட்டல் ! 
 
அம்மா'என்றழைக்கப்பட்டவரின் ஆன்மா என்ன நினைக்கும் ?
 
எனக்கும் அவருக்குமான சில சந்திப்புகளும் சம்பாஷைனைகளும் வந்து போயின நினைவில்!
 
நம்பிக்கை துரோகமும் துரோகிகளின் நம்பிக்கையும் எதுவுமே சகிக்கல!
 
திருமதி சசிகலாவோ, திருமிகு OPS-ஸோ, ஆட்சியமைப்பது சட்ட பூர்வமேயாகையால் சட்டு புட்டுன்னு சட்டசபைக்கு வந்து மக்கள் பணி பாருங்கள்!
 
எம்மக்கள் திருந்திவிட்டார்கள்!!! மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் !
 
நோட்டுக்காக அல்ல...நாட்டுக்காகவே ஓட்டு!  ”

என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments