Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபனின் மருமகன் இவர்தான்? - வெளியான புகைப்படம்

Keerthana
Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (16:16 IST)
நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 
பார்த்திபனின் மகள் கீர்த்தனா கன்னத்தில் முத்தமிட்டால் நடித்திருந்தார். அதன்பின், பல படத்தில் நடிக்க  அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால், நடிப்பில் தனக்கு விருப்பமில்லை என எல்லா வாய்ப்புகளையும் புறக்கணித்தார். படம் இயக்குவதே கீர்த்தனாவின் கனவு, லட்சியம் என்று கூறியிருந்தார். 
 
இந்நிலையில் கீர்த்தனாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரின் திருமணம் வரும் மார்ச் 8ஆம் தேதி லீலா பேலஸில் நடைபெற இருக்கிறது எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகியது. ஆனால் கீர்த்தனா திருமணம் செய்துகொள்ள போகும் நபர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. 
 
இந்நிலையில், அதுபற்றிய செய்தி ஒன்று வெளியே கசிந்துள்ளது. பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷன் என்பவரைத்தான் கீர்த்தனா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதுதான் அந்த செய்தி. அக்‌ஷனும், கீர்த்தனாவும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதாகவும், அவர்களின் காதலை இரு வீட்டார்களும் ஏற்றுக்கொண்டதால் விரைவில் திருமணம் நடக்கவுள்ளது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
ஆனால், பார்த்திபன் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

டிகிரி போதும்.. 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள்! - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே வக்ப் மசோதா: பிரதமர் மோடி கருத்து

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு..!

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வக்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments