Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது: என்ன காரணம்?!

Mahendran
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (15:39 IST)
பாமக வேட்பாளருக்கு கிளி ஜோசியம் பார்த்ததாக புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியான நிலையில் சில நிமிடங்களில் கிளி ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இயக்குனர் தங்கர் பச்சான் தொகுதி முழுவதும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, கிளி ஜோசியம் பார்த்த தங்கர் பஜான் இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா என்று பார்த்து சொல்லுங்கள் என்று கேட்டார்

உடனே எனது கிளி எதையும்  துல்லியமாக சொல்லிவிடும் என்று கூறி கிளியை வைத்து ஒரு அட்டையை எடுத்து அதில் இருந்த அய்யனார் படத்தை பார்த்து ’அய்யனாரே உங்களுக்கு ஆசி வழங்கி விட்டார், எனவே வெற்றி உங்களுக்கு உறுதி என்று தெரிவித்தார்

இதனை அடுத்து அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு தனது பிரச்சாரத்தை தங்கர் பச்சான் தொடங்கினார்

இந்த நிலையில் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் கிளியை கூண்டில் அடைத்து வளர்ப்பதற்கு வனத்துறை அனுமதிக்கிறதா என்ற விமர்சனங்கள் இருந்தது

இதனை அடுத்து அதிரடியாக கிளி ஜோசியரை கைது செய்த வனத்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments