Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்கள் எண்ணிக்கை.. திமுக, அதிமுக எதிர்ப்பு..!

Webdunia
திங்கள், 29 மே 2023 (10:57 IST)
மக்கள் தொகை அடிப்படையில் எம்பிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு அதிமுக, திமுக உட்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன 
 
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 1272 எம்பிக்கள் அமரும் வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் சீரமைப்பு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ’மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். 
 
அதேபோல் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் இது குறித்து கூறிய போது தமிழ்நாடு மட்டுமன்றி ஒட்டு மொத்த தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். அதிமுக திமுக மட்டும் இன்றி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இந்த திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று  பாஜகவினர் மற்றும் சில பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

மின்னணு வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது… எலான் மஸ்க் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments