Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா இல்லத்திற்கு அருகிலேயே குடியேறும் ஓபிஎஸ்

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (12:15 IST)
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்  போயஸ்கார்டனில் குடியேற உள்ளார்.


 


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார். தமிழக அமைச்சர்களுக்கான பங்களா அது. கடந்த 2011ம் ஆண்டு முதல் அந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக அவர் போராட்டத்தை துவக்கினார். சசிகலா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இதனால் அவரை கட்சியிலிருந்து விலக்கி சசிகலா உத்தரவிட்டார். இதையடுத்து அ.தி.மு.க. சசிகலா அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ்க்கு ஆதரவும் அதிகரித்தது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இதையடுத்து பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடிகள் அதிகரித்தன. உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று பொதுப்பணிதுறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவர் சென்னையின் முக்கிய இடங்களில் வீடு தேடினார். தற்போது போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்திற்கு அருகே ஒரு வீட்டினை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து உடனடியாக அந்த இல்லத்தில் குடியேற முடிவு செய்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

ரூபாய்க்கு புதிய இலச்சினை..! எல்லார்க்கும் எல்லாம்! - தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை Highlights!

இந்தியா வந்த இங்கிலாந்து பெண் வன்கொடுமை! இன்ஸ்டா நண்பன் கைது!

அரசுப்பணி தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும்: முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்

தங்கத்தை மறைத்து வைத்து கடத்துவதை கற்று கொண்டது எப்படி? நடிகை ரன்யா வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments