Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ். செயல்பாடு அதிமுக-வை பாதிக்காது: டிடிவி.தினகரன்

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (14:52 IST)
ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எந்த விதத்திலும் அதிமுக என்ற கோட்டையை பாதிக்காது என ஆதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.


 

 
அதிமுக தலைமை அலுவலகத்தில் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
 
ஜெயலலிதா கூறியதால்தான் கட்சியை விட்டு ஒதுங்கி இருந்தேன். கட்சியின் விதி முறைப்படிதான் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கணக்கு விவரங்களை பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கவனித்து வருகிறார்.
 
ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எந்த விதத்திலும் அதிமுக-வை பாதிக்காது. திமுகதான் முக்கிய எதிரி. கட்சியிலும், ஆட்சியிலும், குடும்ப நபர் என்ற ஆதிக்கம் இருக்காது.
 
சட்டமன்றத்தில் கலவரம் செய்து ஆட்சியை கலைக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். தோல்வியின் விரக்தியில் அவர்  செயல்படுகிறார். மக்கள் அ.தி.மு.க. மீது கோபமாக இருப்பதாக சொல்வது பொய் பிரசாரம்.  
 
திமுக-வினர் மக்கள் என்ற போர்வையில் பல்வேறு பிரச்சனைகளில் ஏற்படுத்தி வருகிறார்கள். ஓ.பி.எஸ். என்பது ஒரு அணி அல்ல. அது ஒரு சிறு குழுதான். தாய் கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் தாய் மனதோடு ஏற்றுக் கொள்வோம், என்று கூறினார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments