Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (08:09 IST)
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேட்டில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

மதுரை ஆட்சியர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 1000க்கும் மேற்பட்ட காளைகளும், 1000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீர்ர்களும் பங்கேற்கின்றனர். பாலமேட்டில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
ஜல்லிக்கட்டை முன்னிட்டு  மருத்துவக் குழு, கால்நடை மருத்துவக் குழு, மேலும் காயம் ஏற்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments