Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மடியேந்தி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி: விட்டு விளாசும் பழ.கருப்பையா!

மடியேந்தி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி: விட்டு விளாசும் பழ.கருப்பையா!

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (12:10 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் திமுகவில் ஐக்கியமாகிய பழ.கருப்பையா நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.


 
 
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி திமுக சார்பில் நேற்று முன்தினம் மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் பழ.கருப்பையா பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது பேசிய அவர், மத்தியிலும், மாநிலத்திலும் என இரண்டு கல்வி அமைச்சர்கள் இருப்பதை கண்டித்தார். ஓன்று, இரண்டு ஆண்டுக்கு என பிச்சையெடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று அன்றைக்கு மட்டும் தயாராக மாணவர்களை அதில் திணிப்பதில் நியாயமில்லை என்றார்.
 
மேலும், திராவிட இயக்கங்களின் கெடுபிடிகளால் தான் எடப்பாடி பழனிச்சாமி அங்கே போய் மடியேந்தி நிற்கிறார். நம்முடைய உரிமைகளுக்காக நீங்கள் போராட வேண்டும். மடியேந்தி நிற்கக் கூடாது என கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார் பழ.கருப்பையா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments