Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிசிஐடிக்கு மாறுகிறதா பத்மா ஷேசாத்ரி பள்ளி விவகாரம்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (08:15 IST)
பத்மா ஷேசாத்ரி பள்ளி விவகாரம் இப்போது சிபிசிஐடி போலிஸாருக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். முன்னதாக கடந்த சில மாதங்கள் முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியின் மீது பழைய மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் என இப்போது அடுக்கடுக்காக புகார்களைக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை நேர்மையான கோணத்தில் நடத்த வேண்டும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அதற்காக வழக்கை சிபிசிஐடி போலிஸாருக்கு மாற்றலாமா என யோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில், திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்: ரயில்வே துறை அறிவிப்பு..!

கோவை மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. பள்ளிகளுக்கு விடுமுறை..!

2025ஆம் ஆண்டு புறப்பட்டு 2024ஆம் ஆண்டில் தரையிறங்கிய விமானம்.. த்ரில் அனுபவம்..!

தடையை மீறி மதுரையில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்: அண்ணாமலை

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா? தமிழிசைக்கு கிடைத்த புதிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments