மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய, அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2ஜி ஊழல் வழக்கின் ஒரு பகுதியாக ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை சார்பில் பண மோசடி வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் கார்த்தி சிதம்பரத்திற்கு 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
மாறாக, என்ன குற்றத்திற்காக என்னை ஆஜராக சொல்கிறீர்கள் என்று எதிர்க் கேள்வியும் அவர் கேட்டுள்ளார். இதனால், கார்த்தி சிதம்பரத்தை கைதுசெய்து விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.