Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் குறித்து சர்ச்சைக்கருத்து கூறிய அமெரிக்கா: மத்திய அரசின் மெளனம் ஏன்? ப.சிதம்பர்ம்

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (05:52 IST)
காஷ்மிர் குறித்து அமெரிக்கா சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கும் நிலையில் அதை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது ஏன் என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.



 
 
சமீபத்தில் பாரதபிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு அங்கு சிகப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டதோடு, அந்நாட்டு அதிபரின் வெள்ளை மாளிகையில் விருந்தும் அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இரு நாட்டு உறவு குறித்த ஆலோசனையின் போது அமெரிக்க தரப்பில், 'ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் சய்யத் சலாவுதீன், இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு- காஷ்மீர் பகுதியில் பல நாசவேலைகளை நிகழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டார். 
 
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டரில், 'இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு- காஷ்மீர்' என்று அமெரிக்கா குறிப்பிடப்பட்டதை இந்திய அரசு எப்படி ஏற்றுக்கொண்டது' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு இந்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments