பீலா ராஜேஷுக்கு ப. சிதம்பரம் பாராட்டு: பின்னணி என்ன தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (08:13 IST)
பீலா ராஜேஷுக்கு ப. சிதம்பரம் பாராட்டு:
கடந்த சில நாட்களாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் கொரோனா குறித்த அப்டேட்களை செய்தியாளர்கள் தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மிகவும் தெள்ளத்தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் அவர் கொடுக்கும் விளக்கங்கள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருப்பதாக ஊடகத்தினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி ஊடகவியலாளர்களின் சிக்கலான கேள்விகளுக்கு கூட அவர் அதிகம் யோசிக்காமல் உடனுக்குடன் பதில் அளித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை பீலா ராஜேஷ் அவர்கள் கையாளும் விதம் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இதனை அடுத்து நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர் 
 
இந்தநிலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசன் அவர்களின் மகள் தான் பீலா ராஜேஷ் என்றும், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ மகள் என்பதால் தான் ப சிதம்பரம் அவர்கள் பாராட்டுவதாகவும் ஒருசில தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையாகவே பீலா ராஜேஷ் அவர்கள் ’அறம்’ படத்தில் வரும் நயன்தாரா போல் மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கு சேவை செய்து வருவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments