அரசாங்கத்தை யார் இயக்குகிறார்கள் என்பது புரிகிறதா? - ப.சிதம்பரம் காட்டம்

Webdunia
புதன், 23 மே 2018 (09:36 IST)
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லை ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர். இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ்நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் “தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்? 1.சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு. 2. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம்: உச்சத்திற்கு சென்ற மதுபானம், சிகரெட் விலை..!

சபரிமலையில் தமிழகத்திற்கு 5 ஏக்கர்.. பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

ஜெயலலிதாவால் தான் அண்ணா அறிவாலயம் காப்பாற்றப்பட்டது: எடப்பாடி பழனிசாமி

ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஒரே நாளில் 50,000 கார்கள் விற்பனை செய்த டாடா, மாருதி, ஹூண்டாய்..!

டிராபிக்கை கட்டுப்படுத்த உதவி செய்யுங்கள்.. விப்ரோ நிறுவனத்திற்கு கர்நாடக முதல்வர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments