Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன்முறையாக வெளிமாநிலத்திலிருந்து ஆக்ஸிஜன்! – மேற்கு வங்கத்திலிருந்து தமிழகம் வருகிறது!

Webdunia
வியாழன், 13 மே 2021 (09:56 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்கத்திலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் புறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த சில நாட்களாக உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து ஆக்ஸிஜன் கொண்டு வரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அதன்படி மேற்குவங்கம் துர்காபூரில் இருந்து சென்னைக்கு 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஆக்ஸிஜன் ரயில் சென்னையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு ஆக்ஸிஜன் ரயில் மூலம் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments