தமிழக பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

Siva
திங்கள், 21 அக்டோபர் 2024 (14:22 IST)
தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து, தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய பகுதியில் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
 
, தமிழகத்தின் மேல் இருக்கும் இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, 23ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும், 24ஆம் தேதி ஒரிசா மற்றும் மேற்குவங்க கடற்கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments