அலர்ட்டா இருந்துக்கோங்க டா .. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்டாம்!!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (13:27 IST)
மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். 

 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. அதேபோல் இன்று அதிகாலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. 
 
இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் காரணமாகவும் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனோடு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொருத்த வரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments