Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் கையில் 10 அமைச்சர்களின் குடுமி: கலக்கத்தில் சசிகலா அணி!

ஓபிஎஸ் கையில் 10 அமைச்சர்களின் குடுமி: கலக்கத்தில் சசிகலா அணி!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (10:39 IST)
ஆர்கே நகரில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரச்சார யுத்தியாக எடப்பாடி பழனிச்சாமி அரசில் உள்ள 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டு நிற்பதால் அதிமுகவின் இரண்டு அணிகளுக்கும் ஆர்கே நகர் தேர்தல் முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது. ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும், சசிகலா அணியில் தினகரனும் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.
 
இதனையடுத்து கடும் போட்டியில் தினகரனை எதிர்த்து ஓபிஎஸ் அணியின் மதுசூதனனை வெற்றிபெற வைக்க பல்வேறு யுக்திகளை ஓபிஎஸ் அணியினர் கையாண்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இதன் உச்சக்கட்ட பிரச்சாரமாக தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி அரசின் முக்கிய துறையில் அமைச்சர்களாக இருக்கும் 10 பேரின் ஊழல் விபரங்களை ஓபிஎஸ் அணியினர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
இதற்காக எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்ற பின்னர் அவரது அரசில் நடந்த பல்வேறு ஊழல்கள், முறைகேடுகளின் பட்டியலை தயாரிப்பதில் ஓபிஎஸ் அணி தற்போது தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments