தினகரன் அணியோடு நான் இணையவில்லை - எம்.எல்.ஏ சரவணன் மறுப்பு

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (18:10 IST)
ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி தினகரன் அணியோடு இணைந்து விட்டதாக வெளியான செய்தி வதந்தியே என எம்.எல்.ஏ சரவணன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.


 
 
இன்று தினகரனுக்கு ஜாமீன் கிடைத்த ஒரு மணி நேரத்தில் ஓபிஎஸ் அணியிலிருந்த மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், சசிகலாவின் தினகரன் அணியில் ராஜன் செல்லப்பா முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்தது. உறுதி செய்யப்படாத இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
இந்நிலையில், எம்.எல்.ஏ.சரவணன் தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தரப்பிலிருந்து வெளியிட்டுள்ள செய்தியில் “மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மை தொண்டன் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தர்மயுத்ததின் நாகப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நமது தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு S.S.சரவணன் அவர்கள் பயணம். அண்ணன் திரு O.பன்னீர்செல்வம் அவர்களின் தர்மயுத்ததில் வந்தது வந்தது தான்.கூவாத்தூர் செல்ல வாய்ப்பில்லை. தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments