Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் உட்பட 6 அமைச்சர்கள் பதவி: ஓபிஎஸ் அணியின் கோரிக்கை இது தான்!

முதல்வர் உட்பட 6 அமைச்சர்கள் பதவி: ஓபிஎஸ் அணியின் கோரிக்கை இது தான்!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (14:34 IST)
சசிகலாவின் தலைமையை எதிர்த்து ஓபிஎஸ் பேட்டியளித்த பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டது. இதனையடுத்து மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு பெருகியது.


 
 
ஆனால் சசிகலா அணிக்கு தொடர்ந்து சறுக்கல்களாகவே நடந்து வந்தது. சசிகலா சிறைக்கு சென்றார், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது, தினகரன் மீதான வழக்குகள் வேகம் எடுத்தன, ஆர்கே நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை, தினகரன் மீது தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக புதிய வழக்கு பதிவு என அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வருகிறது சசிகலா தலைமையிலான அதிமுக.
 
இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் தான் தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து கட்சியை மீட்டெடுக்க முடியும் என அதிமுக அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர். இதனால் இரு அணியினரும் பேசுவார்த்தை நடத்தி இணைய சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் சசிகலா குடும்பம் கட்சியில் இருந்து விலகினால் தான் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஓபிஎஸ் அணி கண்டிப்புடன் கூறியுள்ளது.
 
இதனையடுத்து தினகரனை சந்தித்து பேசிய ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது என ஓபிஎஸ்ஸை விமர்சித்துள்ளார். மேலும் ஓபிஎஸ் அணியினர் முதல்வர் பதவி மற்றும் 6 அமைச்சர்கள் பதவியை கேட்டுள்ளதாக அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments