Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ரஞ்சித்திடம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஆவடி குமார்! (வீடியோ இணைப்பு)

நடிகர் ரஞ்சித்திடம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஆவடி குமார்! (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (09:53 IST)
அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த ஆவடி குமாரின் கேள்விக்கு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த நடிகர் ரஞ்சித் வாயடைக்கும் படி பதில் கூறியது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


 
 
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்கே நகர் தேர்தல் ரத்தானது குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த நடிகர் ரஞ்சித் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்க தேர்தல் களத்தில் நின்றோம் என்றார்.
 
அப்போது அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது குறுக்கிட்ட அதிமுக சசிகலா அணியை சேர்ந்த ஆவடி குமார் கட்சியில் உறுப்பினராக இல்லாமல் எப்படி உண்மையான அதிமுக என நக்கலாக கேட்டார். அதற்கு பதிலடி கொடுத்த நடிகர் ரஞ்சித் நான் உறுப்பினராக உள்ள கார்டை காட்டவா என்றார்.

 

நன்றி: News18
 
நான் உறுப்பினராக இருக்கும் கார்டை காட்டினால் நீங்கள் உங்கள் கார்டை கிழித்து போட தயாரா என்றார். இதற்கு பதில் அளிக்க முடியாமல் மௌனமாக வாயில் கை வைத்தவாறு இருந்தார் ஆவடி குமார்.
 
அதனை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட தயார். தைரியம் இருந்தால் தொகுதிக்கு சென்று மக்களை சந்தியுங்கள் என கேட்டார். இதற்கு பதில் அளிக்காமல், நீங்க பேச வந்தத பேசிட்டு போங்க, நாங்க என்ன செய்யனும்னு நீங்க சொல்லாதீங்க. அப்பா நான் பேசும்போது நீங்க எதுக்கு குறுகிட்டீங்கனு பதிலுக்கு ரஞ்சித் கேட்க பதில் அளிக்க முடியாமல் மீண்டும் மௌனம் ஆனார் ஆவடி குமார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன இன்னொரு உயிர்.. தூக்கில் தொங்கி இளைஞர் தற்கொலை..!

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி.. பிரான்ஸ் அரசு கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு..!

மீண்டும் 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.. இலங்கை கடற்படையின் அத்துமீறல்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments