Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் மீதான பயம் - உச்ச நீதிமன்றம் கேவியட் மனு தாக்கல் செய்த ஓ.பி.எஸ்

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (11:14 IST)
இரட்டை இலை விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்  ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சொந்தம் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
 
அந்நிலையில், வருகிற டிசம்பர் 21ம் தேதி ஆர்.கே.நகர்  தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது. எனவே, தினகரன் உச்ச நீதிமன்றத்தை நாடி, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பிற்கு இடைக்கால தடை ஏற்பட்டால், எடப்பாடி அணியால் ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாமல் போகும்.
 
இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் தற்போது கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பான ஏதேனும் உத்தரவை பிறப்பிக்கும் முன்பு தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments