Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் எதுவும் நடக்கலாம்: ரஜினி அரசியல் குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (17:27 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விருப்பதாக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்த நிலையில் இன்று அந்த அறிவிப்பை மீண்டும் உறுதி செய்துள்ளார்

 
இம்மாதம் 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் ஜனவரியில் கட்சி தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தி ஆகியோர்களை நியமித்து அரசியல் கட்சிக்கான பணிகளையும் அவர் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கூறியதாவது:
 
ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். அரசியலில் எதுவும் நடக்கலாம் வருங்காலத்தில் சூழ்நிலையை பொருத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது’ என்று துணை முதலமைச்சர் கூறியுள்ளார். ரஜினிகாந்த் அரசியல்  துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments