Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுப்பாடுகளை பின்பற்ற முதல்வர் அறிவுறுத்தனும்... ஓ.பி.எஸ் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (08:41 IST)
கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருக்கும் மக்களை முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை. 

 
தீபாவளி திருநாள் அடுத்த வாரம் வியாழன் அன்று பொதுமக்கள் கொண்டாட இருப்பதை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்கள் ஏற்கனவே இருந்து வரும் பேருந்துகள் ரயில்கள் விமானங்கள் ஆகியவற்றில் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் மக்கள் தீபாவளி பண்டிகைக்கு துணி மற்றும் நகைகள், பட்டாசுகள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளிக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் கடைவீதிகளில் பொதுமக்கள் கூடுகின்றனர். 
 
இந்நிலையில் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருக்கும் மக்களை முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments