Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவின் துரைமுருகனை நடிக்க சொன்ன ஜெயலலிதா: ஓபிஎஸ் ஓப்பன் டாக்!

திமுகவின் துரைமுருகனை நடிக்க சொன்ன ஜெயலலிதா: ஓபிஎஸ் ஓப்பன் டாக்!

திமுகவின் துரைமுருகனை நடிக்க சொன்ன ஜெயலலிதா: ஓபிஎஸ் ஓப்பன் டாக்!
, செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (13:19 IST)
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவரும், திமுகவின் துணை பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீங்க நடிப்பு துறைக்கு போயிருந்த பெரிய நடிகராயிருப்பீங்கன்னு கூறியதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.


 
 
சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் திமுகவினரை பார்த்து சிரித்ததாகவும், அவரது பின்னணியில் திமுகவினர் இருப்பதாகவும் சசிகலா தரப்பினர் வைக்கும் குற்றச்சாட்டை பற்றி கேட்டனர்.
 
அதற்கு பதில் அளித்த அவர், 2001-2006-ல் சட்டப்பேரவையில் முதல் வரிசையில் நான் ஜெயலலிதா அமர்ந்த வரிசையில் அமர்ந்திருந்தேன். எதிரில் முதல் வரிசையில் துரைமுருகன் அமர்ந்திருந்தார். அப்போது ஜெயலலிதாவை பார்த்தபோது துரைமுருகன் சிரித்தார். உடனே ஜெயலலிதா, துரைமுருகன் அப்படின்னு சொன்னபோது என்னங்கம்மான்னு கேட்டாரு துரைமுருகன்.
 
நீங்க நடிப்புத்துறைக்கு போயிருந்தா மிகப்பெரிய நடிகரா ஆகியிருப்பீங்க' அப்படின்னு ஜெயலலிதா சொன்னாங்க. அவர் நல்லா சிரிச்சிட்டு அம்மா நாங்க என்ன கேள்வி கேட்டாலும் உடனே நீங்க பின்கர்பாயிண்ட்ல வைச்சு பதில் சொல்றீங்கம்மா. நிறைய படிக்கிறீங்கம்மா அப்படின்னு சொன்னாரு. இதையெல்லாம் நாம் தவறாக எடுத்துக்கொள்ள முடியுமா? என கேட்டார் ஓபிஎஸ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் இணைந்தார் ராதாரவி - மீண்டும் தனது குடும்பத்தில் சேர்ந்ததாக பேட்டி